×

கழிவுநீர் கால்வாயில் தவறி விழுந்து காயமடையும் மாணவ, மாணவிகள்

நெய்வேலி, நவ. 8:குறிஞ்சிப்பாடியில் திறந்து கிடக்கும் கழிவுநீர் கால்வாயில் மாணவ, மாணவிகள் தவறி விழுந்து படுகாயம் அடைவது தொடர்கதையாகி வருவதால் அதன்மீது சிலாப் அமைத்துத்தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.குறிஞ்சிப்பாடி பேரூராட்சிக்குட்பட்ட ராஜாஜி வீதி முக்கிய சாலையாக திகழ்கிறது. நாள்தோறும் ஏராளமான பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள், வணிகர்கள் உள்ளிட்டோர் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர். இச்சாலை வழியாக குறிஞ்சிப்பாடியை சுற்றியுள்ள 25க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் தங்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை இங்கு வந்து வாங்கி செல்கின்றனர். ஆனால் இந்த சாலையோரத்தில் உள்ள கழிவுநீர் பாதாள சாக்கடை பல வருடங்களாக திறந்தே கிடப்பதால் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் அவ்வப்போது இதில் தவறி விழுந்து படுகாயம் அடைகின்றனர். மேலும் இந்த கால்வாய் மீது சிமெண்ட் சிலாப் அமைக்கக்கோரி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாக அதிகாரிகளிடம் பலமுறை வலியுறுத்தியும் இதனை மூடுவதற்கான எந்த விதமான நடவடிக்கையும் எடுக்கவில்லை.மேலும் குறிஞ்சிப்பாடியில் உள்ள பல்வேறு நகர் பகுதிகளில் சாலையின் இருபுறமும் உள்ள கால்வாய்கள் திறந்தே கிடப்பதால் துர்நாற்றம் வீசுவதோடு, நோய் பரப்பி வருவதாகவும் கூறப்படுகிறது. எனவே பொதுமக்களின் நலன் கருதி மாவட்ட ஆட்சித்தலைவர் இங்குள்ள கழிவுநீர் கால்வாயை தூர்வாரி அதன் மீது சிலாப் அமைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : sewer canal ,
× RELATED 128 மாணவர்களுக்கு கல்வி உதவிதொகை