×

நத்தம் ஊராட்சியில் சுடுகாடு பகுதியில் ஆக்கிரமிப்பு

பண்ருட்டி, நவ. 8:  பண்ருட்டி அருகே நத்தம் ஊராட்சி பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்கு இறந்தவர்களை தகனம் செய்யவும், புதைக்கவும் சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் சுடுகாடு இருந்தது. இந்த சுடுகாடு பகுதியை பல வருடங்களாக சிலர் ஆக்கிரமித்து நிலமாக திருத்தி பயிர் செய்து வருகின்றனர். இதனால் இறந்தவர்களின் உடலை சாலை ஓரத்திலும் வாய்க்கால் ஓரத்திலும் புதைத்தும், தகனம் செய்தும் வருகின்றனர். ஆக்கிரமிப்பாளர்கள் இடத்தை காலி செய்ய பொதுமக்கள் கேட்டால் மிரட்டப்படுகின்றனர். இது குறித்து அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திடம், சுடுகாட்டு பகுதியை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். இதன் பேரில் தாசில்தார் உதயகுமார் நேற்று நத்தம் கிராமத்திற்கு சென்றார். அங்கு சுமார் ஒரு கிலோ மீட்டர் நடந்தே சென்று ஆய்வு செய்தார். அப்போது அங்கிருந்த பொதுமக்களிடம், ஒரு வார காலத்திற்குள் இடத்தை அளவீடு செய்து ஆக்கிரமிப்பை அகற்றி பயன்பாட்டிற்கு விட நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

Tags : area ,Sudukadu ,Natham Panchayat ,
× RELATED சீனா ஆக்கிரமிப்பு குறித்து பூடான் மறுப்பு