×

கெடிலம் ஆற்றில் தடுப்பணை கட்டும் பணி

கடலூர், நவ. 8: கடலூர் மாவட்டம் திருவதிகை, திருவந்திபுரம் கெடிலம் ஆற்றின் குறுக்கே உள்ள அணைக்கட்டு மற்றும் விலங்கல்பட்டு கெடிலம் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டு வரும் தடுப்பணை பணிகளை மாவட்ட
ஆட்சியர் அன்புச்செல்வன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.கடலூர் மாவட்டத்தில் விவசாய பெருமக்களுக்கு தேவையான நீரை வழங்கிடவும், பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்திடவும் மற்றும் நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்திடவும் மாவட்டத்தில் ஆற்றின் குறுக்கே ஏழு தடுப்பணைகள் கட்டப்பட்டு  வருகிறது. மேலும் ஆறு ஓடைகளில் துர்வாரும் பணிகள் மற்றும் கரைகளை பலப்படுத்தும் பணிகளும் நடைபெற்று வருகிறது.இந்நிலையில், திருவதிகை மற்றும் திருவந்திபுரம் கெடிலம் ஆற்றின் குறுக்கே உள்ள அணைக்கட்டை மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் நேரில் பார்வையிட்டு மதகு மற்றும் கரைகளின் உறுதிதன்மை குறித்து ஆய்வு செய்தார். தொடர்ந்து கடலூர் வட்டம் விலங்கல்பட்டு கிராமம் அருகில் கெடிலம் ஆற்றின் குறுக்கே ரூ.1250 லட்சம் மதிப்பீட்டில் கதவணையுடன் கூடிய தடுப்பணை கட்டும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் இப்பணிகளை விரைந்து முடித்திடவும் மற்றும் மழைக்காலம் என்பதால் அணைகளின் மதகுகள், கரைகளின் உறுதிதன்மையை அவ்வப்போது ஆராய்ந்து தங்கள் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என பொதுப்பணித்துறை செயற்பொறியாளருக்கு உத்தரவிட்டார்.  ஆய்வின்போது பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் சிங்காரவேலு, உதவி செயற்பொறியாளர்கள் கபிலன், தாமோதரன், கடலூர் வட்டாட்சியர் செல்வகுமார்  மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags : Ketelam River ,
× RELATED பள்ளி செல்லா குழந்தைகள் கணக்கெடுப்பு பணி