×

திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்குள் செல்ல முடியாமல் நோயாளிகள் அவதி

திருக்கோவிலூர், நவ. 8: திருக்கோவிலூர் நான்குமுனை சந்திப்பில் அரசு மருத்துவமனை கடந்த 30 வருடத்திற்கு மேலாக இயங்கி வருகிறது. இந்த மருத்துவமனைக்கு தினந்தோறும் திருக்கோவிலூர் மற்றும் அதனை சுற்றியுள்ள 100க்கும் மேற்பட்ட கிராமங்களில் இருந்து சுமார் 2500 நோயாளிகள் வருகின்றனர். இங்குள்ள அவசர சிகிச்சை பிரிவு மெயின் கட்டிட நுழைவு வாயிலில் நூற்றுக்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் நோயாளிகள் மருத்துவமனைக்கு உள்ளே செல்ல சிரமப்படுகின்றனர்.நோயாளிகள் தங்கள் அவசர தேவைக்கு மருத்துவரை பார்க்க முடியாமல் தவித்து வருகின்றனர். மேலும் நுழைவு வாயிலின் மற்றொரு வழியிலும் இதேபோல் வாகனங்கள் நிறுத்தப்படுவதால் 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு கூட வழியில்லாமல் உள்ளது. ஆகையால் மருத்துவமனை ஊழியர்கள் தடுப்பு கட்டை அமைத்து அரசு மருத்துவமனையின் பின் பகுதியில் இரு சக்கர வாகனத்தை நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Tirukovilur Government Hospital ,
× RELATED அசைவம் தர மறுத்ததால் ஆன்லைனில் ஆர்டர்...