×

திருக்கோவிலூரில் ரூ.5 லட்சம் மதிப்புள்ள தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல்

திருக்கோவிலூர், நவ. 8: திருக்கோவிலூர் பகுதியில் ரூ.5 லட்சம் மதிப்பிலான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள்  விற்பனை செய்யப்படுகிறதா என  திருக்கோவிலூர் பேரூராட்சி ஊழியர்கள் அங்குள்ள கடைகளில் நேற்று சோதனை செய்தனர். அப்போது திருக்கோவிலூர் மார்க்கெட் தெருவில் உள்ள தனியார் பார்சல் சர்வீஸ் நிறுவனத்தில் இருந்த சரக்கு லாரியை சோதனை செய்தனர். அப்போது அதில்  ரூ.5 லட்சம் மதிப்பிலான  பிளாஸ்டிக் பொருட்கள் இருப்பதை கண்டுபிடித்தனர். இதையடுத்து  பேரூராட்சி ஊழியர்கள் பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து சரக்கு  லாரிக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தனர்.

Tags :
× RELATED அனைத்து பொருட்களையும் விற்பனை செய்ய...