களைச்செடி நீக்கும் கருவி செயல்விளக்கம்

தென்காசி, நவ. 8:  தென்காசியை அடுத்த கொட்டாகுளத்தில் தங்கப்பழம் வேளாண்மை கல்லூரி மாணவிகள், திருந்திய நெல் சாகுபடி முறையில் பயிரிடப்பட்ட விளை நிலங்களில் வளரும் களைச்செடிகளை நீக்குவதற்கு பயன்படும் கோனோ வீடர்கள் உபயோகிக்கும் முறை குறித்து செயல்விளக்கமளித்தனர்.  நிகழ்ச்சிக்கு வேளாண்மை உதவி இயக்குநர் கனகம்மாள் தலைமை வகித்தார். மாணவிகள் நிரஞ்சனாஉன்னி, கிரிஜா, அபிராமி, அபிநயா, பாத்திமாபல்லா, பவித்ரா, ஹரிபிரியா, சாரதாதேவி ஆகியோர் விவசாயிகளுக்கு, இந்த இயந்திரங்களை பயன்படுத்துவதன் மூலம் வயல்களில் களையெடுக்க தேவைப்படும் வேலையாட்களின் எண்ணிக்கைகயும், ரசாயன களைக்கொல்லிகளின் பயன்பாட்டையும் தவிர்க்கலாம் என்று விளக்கமளித்தனர். மேலும் இந்த இயந்திரம் மூலம் நீக்கப்படும் களைகள் பயிருக்கு உரமாக பயன்படுவதால் விவசாயிகள் செலவை குறைத்து வருமானத்தை அதிகரிக்கலாம் என்று வேளாண் உதவி இயக்குநர் கனகம்மாள் விவசாயிகளுக்கு எடுத்துரைத்தார்.

Related Stories: