குமந்தாபுரம், கிருஷ்ணாபுரத்தில் நூலகம், சமையல் கூடத்தை எம்எல்ஏ திறந்து வைத்தார்

கடையநல்லூர், நவ. 8: கடையநல்லூர் நகராட்சி குமந்தாபுரத்தில் நூலக கட்டிடம் மற்றும் கிருஷ்ணாபுரத்தில் சமுதாய நலக்கூட சமையல் கூடத்தை முகம்மது அபுபக்கர் எம்எல்ஏ திறந்து வைத்தார்.  கடையநல்லூர் நகராட்சி குமந்தாபுரத்தில் முகம்மது அபுபக்கர் எம்எல்ஏ, தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 6 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நூலக கட்டிடம், கிருஷ்ணாபுரத்தில் 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் சமுதாய நலக்கூடத்தில் சமையல்கூடம் கட்டப்பட்டுள்ளன. இதன் திறப்பு விழா நடந்தது. முகம்மது அபுபக்கர் எம்எல்ஏ திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் நகராட்சி பொறியாளர் தங்கபாண்டி, உதவி பொறியாளர் முரளி, நகரமைப்பு அலுவலர் காஜாமைதீன், சுகாதார ஆய்வாளர்கள் சேகர், மாரிச்சாமி, திமுக ஒன்றிய செயலாளர் செல்லத்துரை, முஸ்லிம் லீக் நகர தலைவர் செய்யது மசூது. செயலாளர் அப்துல் லத்தீப், தொகுதி அமைப்பாளர் ஹைதர்அலி, ரகுமத்துல்லா, மண்டல இளைஞரணி அமைப்பாளர் பாட்டபத்து கடாபி, மாவட்ட இளைஞரணி தலைவர் டாக்டர் நவாஸ்கான், கவிஞர் கமால், புதிய தமிழகம் ராஜா, வேவேந்திரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Advertising
Advertising

Related Stories: