×

வாடிக்கையாளர்களுக்கு தீபாவளி பரிசு வழங்கல்

சங்கரன்கோவில், நவ. 8:  சங்கரன்கோவிலில் உள்ள ஏ.ஒன் திவ்யா ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் அனைத்து கிளைகளிலும் தீபாவளியை முன்னிட்டு 1 கிலோ ஸ்வீட் அல்லது 1 கிலோ காரம் வாங்கிய வாடிக்கையாளர்களுக்கு பரிசு கூப்பன்கள் வழங்கப்பட்டது. வாடிக்கையாளர் ஆர்வத்துடன் இனிப்புகளை வாங்கி பம்பர் பரிசு திட்டத்தில் பங்கேற்றனர். இந்நிலையில் குலுக்கல் முறையில் பரிசுகளுக்கான வாடிக்கையாளர்கள் தேர்தெடுக்கப்பட்டனர். இதில் சங்கரன்கோவில் அருகே உள்ள அரியநாயகிபுரத்தை சேர்ந்த சிவா, முதல் பரிசாக 32 இன்ச் எல்இடி டிவி பரிசாக பெற்றார். பனையூரை சேர்ந்த இளையராஜாவுக்கு இரண்டாம் பரிசான பிரிட்ஜ், சங்கரன்கோவிலை சேர்ந்த முருகேசனுக்கு 3ம் பரிசாக மொபைல் போன் கிடைத்தது.தொடர்ந்து 4ம் பரிசாக 17 நபர்களுக்கு ரூ.1000 மதிப்புள்ள எவர்சில்வர் பாத்திரங்களும், 5வது பரிசாக 30 பேருக்கு ரூ.800 மதிப்புள்ள எவர்சில்வர் பாத்திரங்களும், 6ம் பரிசாக 30 நபர்களுக்கு ரூ.500 மதிப்புள்ள எவர்சில்வர் பாத்திரங்களும், 7வது பரிசாக 20 நபர்களுக்கு ரூ.300 மதிப்புள்ள எவர்சில்வர் பாத்திரங்களும் வழங்கப்பட்டது. வெற்றி பெற்றவர்களுக்கு திவ்யா நிறுவனத்தின் பொதுமேலாளர் வெங்கடேஷ் மற்றும் நிறுவன ஊழியர்கள் பரிசுகளை வழங்கினர். பம்பர் பரிசு திட்டத்தில் வெற்றி பெற்றவர்களுக்கு ஏஒன் திவ்யா நிறுவனங்களின் உரிமையாளர் திவ்யா எம்.ரெங்கன் வாழ்த்து தெரிவித்தார்.    

Tags : customers ,
× RELATED இறக்கை கட்டி பறக்கிறது இந்தியா...