×

திருச்செந்தூர் பேரூராட்சியில் ரூ.37.50 லட்சத்தில் புதிய சாலைகள் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி

திருச்செந்தூர், நவ. 8: திருச்செந்தூர் பேரூராட்சியில் ரூ.37.50 லட்சத்தில் கட்டப்பட்டுள்ள புதிய சாலைகள், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டியினை அனிதாராதாகிருஷ்ணன் எம்எல்ஏ திறந்து வைத்தார். திருச்செந்தூரில் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து திருச்செந்தூர் பேரூராட்சிக்குட்பட்ட 11வது வார்டு முத்தாரம்மன் கோயில் தெருவில் ரூ.12.5 லட்சத்தில் பேவர்பிளாக் சாலை, 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் ரூ.12.50 லட்சத்தில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி அமைத்தல், 14வது வார்டு தோப்பூர் பகுதியில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவில் ரூ.12.50 லட்சத்தில் மேல்நிலை நீர்தேக்கத்தொட்டி ஆகியவை கட்டுவதற்கு கடந்தாண்டு டிச.31ம்தேதி அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடைபெற்றது. தற்போது பணிகள் நிறைவடைந்ததையடுத்து இவற்றினை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைப்பதற்கான விழா நேற்று மாலை நடந்தது. அனிதா ராதாகிருஷ்ணன் எம்எல்ஏ தலைமை வகித்து, சாலைகள், மேல்நிலை நீர்தேக்கத்தொட்டிகளை திறந்து வைத்து குடிநீர் வழங்கினார்.

இதில் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் வெற்றிவேல்முருகன், ஒன்றிய திமுக செயலாளர் செங்குழி ரமேஷ், நகர பொறுப்பாளர் வாள்சுடலை, யாதவர் மகாசபை தலைவர் முருகேசன், செயலாளர் நாராயணன், பொருளாளர் ராஜேஸ்வரன், நிர்வாகி வீரக்கன், தோப்பூர் ஊர்த்தலைவர் நந்தக்குமார், செயலாளர் சுரேஷ், பொருளாளர் செல்வம், தமிழ்ச்செல்வன், தோப்பூர் சேகர், தனசேகரன், ஜாண், பாலகிருஷ்ணன், மாவட்ட மகளிரணி துணை அமைப்பாளர் லதா கலைச்செல்வன், முன்னாள் பேரூராட்சி உறுப்பினர்கள் கோமதிநாயகம், ராஜ்மோகன், ஆனந்தராமச்சந்திரன், கலைசெல்வன், ஆட்டோ கண்ணன், மாவட்ட பிரதிநிதி முத்துக்குமார், ஊராட்சி செயலாளர்கள் பரமன்குறிச்சி இளங்கோ, மாவட்ட தொண்டரணி துணை அமைப்பாளர் சுப்பிரமணியன், மாவட்ட தொமுச பொருளாளர் குழந்தைவேலு, கேடிசி முருகன், சித்தன், அமலிசந்திரன், சாமுவேல்ராஜ், கணேசன், நம்பிராஜன், நயினார், சந்திரசேகரன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Tags : roads ,Thiruchendur ,
× RELATED ஆண்டிபட்டி அருகே மழை பெய்தால் குளமாகும் சாலை வாகன ஓட்டிகள் அவதி