×

ஐயப்பன் ரத யாத்திரைக்கு உற்சாக வரவேற்பு

ஏரல், நவ.8: சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் ஐயப்ப பக்தர்களை ஒருங்கிணைக்கவும், ஆறு, குளம், ஏரி மற்றும் வாய்க்கால்களை சுத்தமாக வைத்திடவும், விவசாயம் செழித்து மக்கள் ஆரோக்கியமாக வாழ மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த ஐயப்ப ரத ஜோதியினை வழிபடுவதற்காக நாடு முழுவதும் தர்ம பிரசார ரதயாத்திரை நடந்து வருகிறது. உமரிக்காட்டிற்கு வந்த யாத்திரைக்கு கிராம விவசாய சங்க தலைவர் நடேசன் மலப்பழம் தலைமையில் நிர்வாகஸ்தர்கள் சிவகுமார், கனிராஜ், ஜெயமுருகன், பொன்ராஜ், மணிகண்டன், காசிவேல், வேல்முருகன் மற்றும் ஊர்மக்கள் வரவேற்று சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு ரதத்தில் இருந்த ஐயப்ப ஜோதியை அகல் விளக்கில் பக்தர்கள் வீட்டிற்கு எடுத்து சென்றனர். நிகழ்ச்சியில் ஐயப்ப சேவா சமாஜம் மாநில செயலாளர் பாவநாசம், தூத்துக்குடி மாவட்ட மண்டல பொறுப்பாளர் துரைராஜா இளந்துழகன் பங்கேற்றனர்.

வாழவல்லான் தெற்கூர் சார்பாக குருசாமி, ஜெயவீரபாண்டியன், பச்சை பெருமாள், கணேசன், மேலூர் சார்பில் ஆறுமுகசங்கரேஸ் மற்றும் ஊர்மக்களும், கணபதிசமுத்திரத்தில் மாயாண்டி, ராஜேந்திரன், பெருமாள, கருப்பசாமி, மந்திரவேல், கண்ணன், வேங்கடேசன், அலங்கர் ஆகியோரும், ஏரலில் பூசாரி சண்முகம், மந்திரகுமார் தலைமையில் பாலன், ராமலிங்கம், ராமதாஸ், குருத்துகுமார், முத்துமாலை, அருணாசலம், ஜெயசயணன், ஜெயகுமார், பாலன், வெங்கடேஸ், முத்துசிவா உட்பட பக்தர்கள் வரவேற்றனர். ஏரல் சிவன் கோயில் முன்பு வரவேற்பு அளிக்கப்பட்டு ஏரல் பஜார் வழியாக ரத ஊர்வலம் வைகுண்டம் உட்பட பகுதிக்கு சென்றது. ஏற்பாடுகளை மாவட்ட பொறுப்பாளர் சிவராமன், மாவட்ட மண்டல பொறுப்பாளர்கள்  சித்திரைவேல், துரைராஜா இளந்துழகன் உட்பட குழுவினர் செய்திருந்தனர்.

Tags : Iyappan Ratha Yatra ,
× RELATED விஸ்வநாதநகர் குடியிருப்போர் நலச்சங்க கூட்டம்