நிலவேம்பு குடிநீர் வழங்கல்

ஏரல், நவ.8: ஏரல் அருகே கணபதிசமுத்திரம் தெக்காடு முகைதீன் ஜும்ஆ பள்ளிவாசலில் ஏரல் ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையும், சென்னை பிலாலியா அரபி கல்லூரி குழுமமும் இணைந்து நிலவேம்பு குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு ஜமாத் தலைவர் பாக்கர்அலி தலைமை வகித்தார். கணபதிசமுத்திரம் ஊர் தலைவர் மாயாண்டி மற்றும் முகம்மது ஹீசைன், தர்மத்துரை ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஏரல் அரசு மருத்துவமனை சித்தா உதவி டாக்டர் செல்வக்குமார் பொதுமக்களுக்கு நிலவேம்பு குடிநீர் வழங்கி துவக்கி வைத்தார். ஆலீம் யாகூப் நன்றி கூறினார். இதில் ரசீதுகான், ஷாஜகான், ஜாஹீர், ஆவுல்பாதுஷா, சென்னை பிலாலியா அரபு கல்லூரி மாணவர்கள், உலமாக்கள் பங்கேற்றனர்.

திருச்செந்தூர்:திருச்செந்தூரில் டெங்கு காய்ச்சல் முன் தடுப்பு நடவடிக்கை எடுக்கப்பட்டன. திருச்செந்தூர் பேரூராட்சி பகுதியில் டெங்கு காய்ச்சல் முன் தடுப்பு நடைவடிக்கையாக 10,11வது வார்டு முத்தாரம்மன் கோயில் தெரு மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு, ஓட்டு மொத்த துப்புரவு பணியும், 1200 வீடுகளில் டெங்கு முன் தடுப்பு பணியாக நல்ல தண்ணீரில் கொசு முட்டைகளை அழிக்கும் பணிகள், நிலவேம்பு மூலிகை குடிநீர் வழங்குதல், புகைமருந்து அடித்தல் மற்றும் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு நோட்டீஸ் வழங்கப்பட்டது.
Advertising
Advertising

இதில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் கீதாராணி டெங்கு காய்ச்சல் பரவும் விதம், தடுக்கும் விதம், சுகாதார நலக்கல்வி பற்றி விளக்கி பேசினார். இதில் வட்டார மருத்து அலுவலர் டாக்டர் அஜய், வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சுப்பிரமணியன், சுகாதார ஆய்வாளர்கள் வெற்றிவேல்முருகன், ஜெய்சங்கர், நாகராஜன் மற்றும் பயிற்சி செவிலியர் மாணவிகள், பயிற்சி சுகாதார ஆய்வாளர் மாணவர்கள் பங்கேற்றனர்.

Related Stories: