×

ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருத்துவர், செவிலியர் பற்றாக்குறை

சாத்தான்குளம், நவ. 8: முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரு மருத்துவர் மற்றும் ஒரு செவிலியர் மட்டும் பணிபுரிவதால்  நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.  எனவே போதுமான மருத்துவர், செவிலியர்கள் நியமிக்க வேண்டும் என  மாவட்ட பாஜக துணை தலைவர் செல்வராஜ் புகார்  தெரிவித்துள்ளார். சாத்தான்குளம் வட்டாரத்தில் முதலூரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையம்  தலைமை  மருத்துவமனையாக செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனைக்கு சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமானவர்கள் வந்து சிகிச்சை பெற்று திரும்புகின்றனர். இதில் போதுமான மருத்துவர்,மற்றும் செவிலியர்கள் இல்லையென புகார் எழுந்துளளது. புறநோயாளியாக சிகிச்சை பெறும் பொதுப்பிரிவில் இரு மருத்துவர்களும், 3 செவிலியர்களும் இருக்க வேண்டும். ஆனால் நோயாளிகளின் பொதுபிரிவில் ஒரு டாக்டர் மற்றும் ஒரு செவிலியர் மட்டும்  இருந்து பணிபுரிகின்றனர். மருத்துவமனைக்கு நோயாளிகள் அதிகமாக வந்து செல்வதால் உரிய  சிகிச்சை அளிக்க முடியாத நிலைமை ஏற்படுகிறது.  உரிய நேரத்தில் சிகிச்சை பெற முடியாமல் காத்திருக்க வேண்டிய நிலை தொடர்கிறது. இதனால் நோயாளிகள் அவதி அடைந்து  வருகின்றனர்.  எனவே  மாவட்ட கலெக்டர்,  போர்க்கால அடிபடையில் விரைந்து நடவடிக்கை எடுத்து முதலூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்துக்கு  போதுமான செவிலியர் பணியாளர்களை பணியமர்த்தி நோயாளிகள் நலன் காக்க வேண்டும் என தூத்துக்குடி மாவட்ட பாஜக துணைத் தலைவர் செல்வராஜ் கோரிக்கை  விடுத்துள்ளார்.

Tags : doctor ,nurse ,health center ,
× RELATED ஆவின் மற்றும் தனியார் பால் தட்டுப்பாடு