×

கைதான ஆட்டோ டிரைவரின் நண்பரிடம் காவலில் விசாரணை

சேலம், நவ.8: பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்த வழக்கில் கைதான ஆட்டோ டிரைவரின் மனைவி போலீஸ் கமிஷனர் அலுவலதத்தில் புகார் மனு கொடுத்துள்ளார். சேலம் இளம்பிள்ளையை சேர்ந்தவர் மோகன்ராஜ்(45). ஆட்டோ டிரைவர். இவர் ஏழை பெண்களை மிரட்டி பலாத்காரம் செய்து அதனை வீடியோவில் பதிவு செய்து தொடர்ந்து மிரட்டி வந்ததாக எழுந்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டார். அவரது நண்பர் மணிகண்டனும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டார். ஆட்டோ டிரைவர் மோகன்ராஜை போலீசார் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரணை செய்தனர். அப்போது அவர் தான் செய்த தவறுகளை ஒப்புக்கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் அவரது மனைவி சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். அதில் தனது கணவர் எந்த தவறையும் செய்யவில்லை. சாதி ரீதியாகவும் அரசியல் கட்சி ரீதியாகவும் சிக்க வைத்துவிட்டனர் என தெரிவித்துள்ளார். இதற்கிடையில் மோகன்ராஜ் மீது 3 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அவரை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்நிலையில் ஆட்டோ டிரைவர் மோகன்ராஜின் நண்பர் மணிகண்டனை போலீசார் 2 நாள் காவலில் எடுத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Detectives ,auto driver ,
× RELATED அவர் நண்பர் ரொம்ப திறமைசாலி