×

விவசாயியிடம் ₹27 ஆயிரம் திருட்டு

இடைப்பாடி, நவ.8:  இடைப்பாடி அருகே வங்கியில் பணம் எடுத்து திரும்பிய விவசாயியிடம் மர்ம நபர்கள் ₹27 ஆயிரத்தை திருடி சென்றனர். இடைப்பாடி அருகே மலங்காடு பகுதியை சேர்ந்த விவசாயி ஆறுமுகம்(55). இவர் நேற்று மதியம், இடைப்பாடி போலீஸ் ஸ்டேசன் பின்புறமுள்ள இந்தியன் வங்கியில் ₹27 ஆயிரம் பணம் மற்றும் 1 பவுன் மோதிரத்தை பெற்றுக்கொண்டு, அதை மஞ்சள் பையில் வைத்து வெளியே நின்றிருந்த தனது டூவீலரில் வந்து மாட்டினார். அப்போது பைக்கில் ஹெல்மெட் அணிந்த வந்த மர்ம ஆசாமிகள் 2 பேர், ஆறுமுகத்திடம் ₹20 பணம் கீழே கிடப்பதாக கூறினர். அதை பார்த்த ஆறுமுகம் அதை எடுக்க முயன்றபோது, மர்ம ஆசாமிகள் அவரது டூவீலரில் மாட்டியிருந்த மஞ்சள் பையை தூக்கி கொண்டு அங்கிருந்து மின்னல் வேகத்தில் பறந்தனர். இதை பார்த்து அதிர்ச்சியடைந்த ஆறுமுகம் கூச்சலிட்டார். அதை கேட்டு அங்கிருந்தவர்கள், ஹெல்மெட் கொள்ளையர்களை பிடிக்க முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து ஆறுமுகம் இடைப்பாடி போலீசில் புகாரளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED உழவர் உற்பத்தியாளர் குழு துவக்கம்