×

தடகள போட்டிகளில் வெற்றி அஞ்செட்டி அரசு பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு

தேன்கனிக்கோட்டை, நவ.8:  தடகள போட்டிகளில் வெற்றி பெற்ற அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு விழா நடைபெற்றது. கிருஷ்ணகிரி வருவாய் மாவட்ட அளவில் நடைபெற்ற தடகள மற்றும் சாலை சைக்கிள் விளையாட்டு போட்டிகளில் அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் 45 பேர் கலந்து கொண்டனர். இவர்களில், 38 மாணவ, மாணவிகள், பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்று பதக்கம் வென்றனர். இதன்மூலம் மாணவிகள் சங்கீதா, அனிதா, சிவசங்கரி, கோமதி, ஸ்ரீதேவி, புவனேஷ்வரி, கோதரீஸ்வரி மற்றும் மாணவர்கள் கந்தசாமி, சரவணன், பிரகாஷ்ராஜ் ஆகிய 10 பேர், மாநில அளவிலான தடகள போட்டக்கு தகுதி பெற்றுள்ளனர். போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, பள்ளி தலைமை ஆசிரியர் சண்முகம், உதவித் தலைமை ஆசிரியர் கணேசமூர்த்தி மற்றும் ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர்.

Tags :
× RELATED அசாதாரணமான சாதனை: ஹிமாச்சலப்...