×

டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்

கிருஷ்ணகிரி, நவ.8: நாகரசம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் டெங்கு தடுப்பு பிரசார நிகழ்ச்சியில் விழிப்புணர்வு குறும்படம் ஒளிபரப்பப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் தடுப்பு குறித்து, மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அதன்படி, செய்தி மக்கள் தொடர்புத்துறை, பள்ளிக் கல்வித்துறை இணைந்து பள்ளி, கல்லூரிகளில் எல்இடி வீடியோ வாகனம் மூலம் டெங்கு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதில் டெங்கு உற்பத்தி செய்யும் ஏடிஎஸ் கொசு எவ்வாறு உருவாகிறது. அவற்றை எவ்வாறு தடுப்பது, டெங்கு வந்த பின்பு மேற்கொள்ள வேண்டிய சிகிச்சை குறித்து குறும்படங்கள் ஒளிப்பரப்பு செய்யப்படுகிறது. மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த, அனைத்து பள்ளிகளிலும் இந்த பிரசாரம் செய்யப்படுகிறது. அதன்படி, நாகரசம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சியை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் மகேஸ்வரி துவக்கி வைத்து பார்வையிட்டார். இந்த பிரசாரத்தில், கல்வி அலுவலர்கள், ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், செய்தி மக்கள் தொடர்பு துறை பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

Tags : Dengue Prevention Awareness Campaign ,
× RELATED கோவில்பட்டியில் டெங்கு தடுப்பு விழிப்புணர்வு பிரசாரம்