×

கெலவரப்பள்ளி அணை நீரை கொண்டு வர நடவடிக்கை

வேப்பனஹள்ளி, நவ.8: வேப்பனஹள்ளி பகுதியில் உள்ள ஏரிகளுக்கு, கெலவரப்பள்ளி அணை உபரிநீரை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டுமென, கலெக்டரிடம் திமுக எம்எல்ஏ முருகன் வலியுறுத்தியுள்ளார். வேப்பனஹள்ளி திமுக எம்எல்ஏ முருகன், கலெக்டர் பிரபாகரை சந்தித்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: சூளகிரி, வேப்பனஹள்ளி பகுதியில் பரவலாக மழை பெய்தும், நீர்நிலைகளுக்கு தண்ணீர் வரத்தின்றி வறண்டு காணப்படுகிறது. எனவே, ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரிநீரை, வேப்பனஹள்ளி அடுத்த கோனேரிபள்ளி கால்வாய் வழியாக காமன்தொட்டி, தியாகரசனப்பள்ளி பஞ்சாயத்திற்குட்பட்ட சப்படி ஏரி, திண்ணூர் ஏரி, பாலமேடு ஏரி வழியாக நல்லாரண் ஏரி, சிகரலப்பள்ளி ஏரி உள்ளிட்ட ஏரிகளுக்கு திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், நாயக்கனப்பள்ளி ஊராட்சிக்குட்பட்ட பாப்பனகொட்டாய், நல்லராத்தப்ப ெகாட்டாய் பகுதியில் குடிநீர் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் கடந்த 6 மாதமாக தண்ணீர் கிடைக்காமல் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே, அப்பகுதியில் ஆழ்துளை கிணறு அமைத்து தண்ணீர் வழங்க வேண்டும். இதேபோல், உத்தனப்பள்ளி மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்ய வேண்டும். இவ்வாறு முருகன் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.
அப்போது, பொதுக்குழு உறுப்பினர் சின்னசாமி, சூளகிரி தெற்கு ஒன்றிய செயலாளர் வெங்கடேஷ், நிர்வாகிகள் அன்புசேகரன், சுரேஷ் மற்றும் நிர்வாகிகள் உடனிருந்தனர்

Tags : Kelavarapalli Dam ,
× RELATED கனமழை காரணமாக ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் நீர்வரத்து அதிகரிப்பு