×

டாஸ்மாக் கடைகளுக்கு வரும் 10ம் தேதி விடுமுறை

நாமக்கல், நவ.8: மிலாது நபியை முன்னிட்டு, அரசு டாஸ்மாக் கடைகளை வரும் 10ம் தேதி மூடவேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மிலாது  நபியை முன்னிட்டு, இந்திய தயாரிப்பு, அயல்நாட்டு மதுபான சில்லறை விற்பனைக்  கடைகள், மது கூடங்கள் மற்றும் உரிம வளாகங்கள் அனைத்தும் மூடப்பட வேண்டும்  என அரசு உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி, வரும் (10ம்தேதி)  நாமக்கல்  மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான கடைகள், பார்கள் மூடப்பட வேண்டும். இதை  மீறி மதுக்கடைகள், மதுக்கூடங்களை திறந்து வைத்து, விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர்  மெகராஜ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tags : Holidays ,Task Shops ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்