×

நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழு கூட்டம்

நாமக்கல், நவ.8: நாமக்கல்லில் கிழக்கு மாவட்ட திமுக செயற்குழுக் கூட்டம், அவைத்தலைவர் உடையவர் தலைமையில் நேற்று நடைபெற்றது. இதில் மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் மத்திய இணையமைச்சருமான காந்திசெல்வன் கலந்து கொண்டு பேசினார். கூட்டத்தில், ராசிபுரம்  நகராட்சியில் அனைத்து சாலைகளும்  சேதமடைந்து காணப்படுகிறது. இதனால் பஸ்கள் ஊருக்குள் வராமல் புறவழிச்சாலை வழியாக  புதிய பேருந்து நிலையம் செல்வதால், பொதுமக்கள்  பாதிக்கப்படுகிறார்கள். எனவே, போர்க்கால அடிப்படையில், சேதமடைந்த சாலைகளை சீரமைக்க வேண்டும். ராசிபுரம் நகராட்சியில், தற்போது 20 நாட்களுக்கு ஒரு முறை தான் தண்ணீர் வருகிறது. நகராட்சியில் குடிநீர் கட்டணமும் உயர்ந்துள்ளது. இதை கண்டித்து வரும்  14ம் தேதி காலை 10 மணிக்கு, ராசிபுரம் பழைய பேருந்து நிலையம் முன்பு திமுக  சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில்  முன்னாள் எம்எல்ஏக்கள் பொன்னுசாமி, ராமசாமி, மாவட்ட பொருளாளர் செல்வம்,  ராசிபுரம் நகர செயலாளர் சங்கர், பொதுக்குழு உறுப்பினர் டாக்டர் மாயவன்,  மாநில மகளிர் அணி இணைச்செயலாளர் ராணி, மாவட்ட வழக்கறிஞர் அணி அமைப்பாளர்  அறிவழகன், மீனவர் அணி அமைப்பாளர் சுகுமார் மற்றும் ஒன்றிய, பேரூர்  செயலாளர்கள், பல்வேறு அணிகளின் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Eastern District ,Executive Committee Meeting ,DMK ,Namakkal ,
× RELATED வருவாய் கிராம ஊழியர் சங்க செயற்குழு கூட்டம்