×

திருச்செங்கோட்டில் காங்கிரஸ் ஆலோசனை கூட்டம்

திருச்செங்கோடு, நவ.8: நாமக்கல் மேற்கு மாவட்ட காங்கிரஸ் ஆலோசனை கூட்டம், திருச்செங்கோட்டில் நேற்று  மாவட்ட தலைவர் தனகோபால் தலைமையில் நடந்தது. பொருளாளர் பொன்னுசாமி, மாவட்ட துணைத்தலைவர்  லோகநாதன்,  எலச்சிபாளையம் வட்டார தலைவர் ராஜலிங்கம், மாநில பொதுக்குழு உறுப்பினர்  சிவநேசன்,  மாவட்ட இளைஞர் அணி தலைவர் சதீஷ்குமார் ஆகியோர் முன்னிலை  வகித்தனர். மாவட்ட பொதுச்செயலாளர் கண்ணன் வரவேற்றார். கூட்டத்தில் மத்திய மோடி அரசின்  பொருளாதார சீர்குலைவை கண்டித்து, திருச்செங்கோடு அண்ணா சிலை அருகில், வரும் 13ம் தேதி காலை 10 மணிக்கு ஆர்ப்பாட்டம் நடத்த முடிவானது. இதில் அகில இந்திய செயலாளர்  ஸ்ரீவெல்பிரசாத், மாநில பொதுச்செயலாளர் ராஜேந்திரன், மாநில செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் ஆகியோர்  கலந்து கொள்ள உள்ளனர். ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட, நகர, வட்டார  மற்றும் பல்வேறு அணிகளை சேர்ந்தவர்கள் திரளாக கலந்துகொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது. நகர பொருளாளர்  சண்முகம் நன்றி கூறினார். இதில் மாவட்ட துணைத்தலைவர் செல்லவேல், வட்டார தலைவர் ஜலீல் கணேசன், குமாரபாளையம் ஜானகிராமன், மல்லசமுத்திரம் கணேசமூர்த்தி, சிவாஜி சேகர், மாவட்ட மகளிரணி தலைவி ஜெயக்கொடி, பரமேஸ்வரி, மணிவண்ணன், கிருஷ்ணன்  உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Tags : Congress ,consultation meeting ,Tiruchengode ,
× RELATED நிர்வாகிகள் செயல்பாடுகளில் திருப்தி...