×

ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்பி., எம்எல்ஏ நேரில் ஆய்வு

திருச்செங்கோடு, நவ.8: கபிலர்மலை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், நாமக்கல் எம்பி சின்ராஜ், பரமத்திவேலூர் எம்எல்ஏ கே.எஸ்.மூர்த்தி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். நாமக்கல்லில் அரசு  மாவட்ட தலைமை மருத்துவமனை, ஆரம்ப சுகாதார நிலையங்களில் மர்ம காய்ச்சல்  பாதிப்புக்குள்ளாகி, சிகிச்சைக்கு வரும் நோயாளிகள் எண்ணிக்கை  அதிகரித்துள்ளது. இதனையடுத்து, மருத்துவமனைகளில் தனி வார்டு அமைத்து நோயாளிகளுக்கு சிகிச்சையளித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று, கபிலர்மலை  அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில்,  நாமக்கல் எம்பி சின்ராஜ்,  பரமத்திவேலூர்  எம்எல்ஏ கே.எஸ்.மூர்த்தி  ஆகியோர் ஆய்வு செய்தனர். அப்போது  மருத்துவமனையில் வழங்கப்படும் சிகிச்சைகள் குறித்து நோயாளிகள் மற்றும்  மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர். கிராமப்புறங்களில் இருந்த காய்ச்சல்  பாதித்து சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு, தரமான சிகிச்சை அளிக்கும்படி  மருத்துவர்களை கேட்டுக்கொண்டனர். இந்த ஆய்வின் போது, கபிலர்மலை ஒன்றிய  திமுக  செயலாளர் சண்முகம் மற்றும் திமுக, கொமதேக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : MB ,MLA ,Primary Health Center ,
× RELATED சீரமைக்கப்படும் மேம்பால சாலை பணிகள்: எம்எல்ஏ, எம்பி ஆய்வு