×

மாற்றுத்திறன்குழந்தைகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை

குமாரபாளையம், நவ.8: மாற்றுத்திறன் குழந்தைகளுக்கு இலவச மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது. குமாரபாளையம் எக்ஸல் பிசியோதெரபி மருத்துவ கல்லூரியில், மாற்றுத்திறன் குழந்தைகளுக்கான இலவச மருத்துவ பரிசோதனை மற்றும் புத்துணர்ச்சி முகாம்  நடைபெற்றது. முகாமிற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் டாக்டர் நடேசன் தலைமை தாங்கி  பேசினார். துணைத்தலைவர் டாக்டர் மதன்கார்த்திக் முன்னிலை வகித்தார்.  கல்லூரி முதல்வர் அய்யப்பன் வரவேற்றார். கல்லூரியின் வேலை  வாய்ப்பு பயிற்சித்துறை இயக்குனர் சம்பத் பங்கேற்று பேசினார். முகாமில் பங்கேற்ற குழந்தைகளின் உடல்திறன் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும், அவர்களுக்கு உடற்பயிற்சிகள் வழங்கப்பட்டது. குழந்தைகளின்  பெற்றோர்களிடம், குழந்தைகளுக்கான பயிற்சிகள் குறித்து விளக்கப்பட்டது.  இத்துடன் மாற்றுதிறன் குழந்தைகளை ஊக்கப்படுத்தி பரிசுகள், நோட்டு  புத்தகங்கள் வழங்கப்பட்டது. முகாமில் யோகா கல்லூரி முதல்வர் விபாஸ், சித்த  மருத்துவ கல்லூரி முதல்வர் சுனிதா சாரோன் மற்றும் மருத்துவர்கள், மாணவ,  மாணவிகள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED செங்குந்தர் பொறியியல் கல்லூரியில் குறுகிய கால பயிற்சி திட்டம்