×

மா.கம்யூனிஸ்ட் பாடை கட்டி போராட்டம்

திருச்செங்கோடு, நவ.8: திருச்செங்கோடு அருகே 10 ஆண்டுகளாக இயங்கி வந்த 108 ஆம்புலன்ஸ் சேவை மையம்  இடமாற்றம் செய்யப்பட்டதை கண்டித்து, எலச்சிபாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் பாடை கட்டி நூதன முறையில் போராட்டம் நடத்தினர்.  திருச்செங்கோடு தாலுகா எலச்சிபாளையத்தை மையமாக கொண்டு, பெரியமணலி, வையப்பமலை,  மாணிக்கம்பாளையம், ராமாபுரம், கொன்னையார், இலுப்புலி,  கிளாப்பாளையம், ராயர்பாளையம், கோக்கலை உள்ளிட்ட 30க்கும் மேற்பட்ட  கிராமப்புறங்களுக்கு 108 ஆம்புலன்ஸ் சேவை மையம், கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வந்தது. இந்நிலையில், எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல், 108 ஆம்புலன்ஸ் சேவை மையம், திருச்செங்கோடு அருகே உள்ள குமரமங்கலத்திற்கு  இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது.  

இதனால் மேற்குறிப்பிட்ட கிராமங்களில் சாலை விபத்துக்கள், தீவிபத்துக்கள் நடக்கும் போதும், கர்ப்பிணி  பெண்களை பிரசவத்திற்கு அழைத்துச்செல்லும் போதும், 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. விபத்துக்களில்  சிக்குபவர்கள் உரிய காலத்தில் மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடியாததால், உயிரிழக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது.  இதையடுத்து, எலச்சிபாளையத்தை மையமாகக் கொண்டு மீண்டும் 108 ஆம்புலன்ஸ் சேவையை துவக்க வலியுறுத்தி, எலச்சிபாலையம் பேருந்து நிறுத்தத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர், தலையில் காயமடைந்தது போல் கட்டு கட்டிக்கொண்டு, பாடை கட்டி அதில் படுத்துக்கொண்டு, சாவு மேளம் அடித்து போராட்டத்தில்  ஈடுபட்டனர். போராட்டத்திற்கு ஒன்றிய குழு உறுப்பினர் சுரேஷ் தலைமை வகித்தார். மாவட்ட  செயலாளர் கந்தசாமி, ஒன்றிய  செயலாளர் சுரேஷ், ஒன்றியக்குழு  உறுப்பினர் வெங்கடாசலம், எலச்சிபாளையம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு  இயக்குனர் மாரிமுத்து உட்பட பலர் கலந்து கொண்டனர். சமத்துவபுரம் கிளை செயலாளர் ஜெயந்தி நன்றி கூறினார். இந்த நூதன போராட்டத்தில் 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Communist Party ,
× RELATED ஊரடங்கால் பாதிக்கப்பட்ட ஆட்டோ...