×

கொங்கு மெட்ரிக் பள்ளி மாணவிகள் முதலிடம்

பரமத்திவேலூர், நவ.8: நாமக்கல் மாவட்ட அளவிலான கூடைப்பந்து போட்டியில், பரமத்திவேலூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவிகள் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழக பள்ளிக் கல்வித்துறை சார்பில், நாமக்கல் மாவட்ட அளவிலான 17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டி, பரமத்திவேலூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இதில், வட்ட அளவில் வெற்றி பெற்ற 8 பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் கலந்து கொண்டு விளையாடினர். போட்டியை பள்ளி தலைவர் ஆடிட்டர் கிருத்திகன் லோகேஷ், துணைத் தலைவர் வி.எம்.சுப்ரமணியம், இணைச் செயலாளர் நடராஜன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இறுதி போட்டியில் பரமத்திவேலூர் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியுடன், மல்லசமுத்திரம் மஹேந்ரா மேல்நிலைப்பள்ளி அணி மோதியது. இதில் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி அணி வெற்றி பெற்று. மாவட்ட அளவில் முதலிடத்தை பெற்றது. சாதனை படைத்த மாணவிகளையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்களையும், கொங்கு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் தலைவர் ஆடிட்டர் கிருத்திகன் லோகேஷ், துணைத் தலைவர் சுப்ரமணியன், பொருளாளர் தியாகராஜன், இணைச் செயலாளர் நடராஜன், போக்குவரத்து இயக்குனர் செந்தில்குமார், பள்ளியின் இயக்குனர்கள், முதல்வர்கள், ஆசிரிய, ஆசிரியைகள் பாராட்டினர்.

Tags : number one ,
× RELATED பாழானது படிப்பு; வீணானது பட்ட கஷ்டம்...