×

வித்யா விகாஸ் பள்ளி மாணவர்கள் தேர்வு

திருச்செங்கோடு, நவ.8: நாமக்கல் மாவட்ட அளவிளான தடகள போட்டியில் வெற்றி பெற்ற திருச்செங்கோடு வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள்,  மாநில போட்டிக்கு தகுதி  பெற்றனர். நாமக்கல் மாவட்ட இருபாலர் விளையாட்டு கழகம் மற்றும் பள்ளிக்கல்வி இயக்குநரகம் நடத்திய மாவட்ட அளவிலான தடகள விளையாட்டு போட்டிகள், நாமக்கல் மாவட்ட கால்நடை மருத்துவக் கல்லூரி திடலில் நடந்தது. இதில் இளையோர், மூத்தோர், மேல்மூத்தோர் பிரிவுகளில்  வித்யாவிகாஸ் மெட்ரிக்  பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர். மூத்தோர் பிரிவில் பிரசன்னா 400 மீ முதலிடம், சத்தியமூர்த்தி மூன்றாமிடம் பெற்றனர். 40`0 மீ  தொடர் ஓட்டத்தில் பிரசன்னா, தனுஷ், சத்தியமூர்த்தி, பிரவின்குமா`ர் ஆகியோர் கொண்ட குழு முதலிடம்,  குண்டு எறிதல் போட்டியில் கவின்  இரண்டாமிடம் பெற்றனர். போட்டியில் சிறப்பிடம் பெற்ற மாணவர்கள்,  மாநில அளவிலான போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றனர். சாதனை படைத்த மாணவர்களை வித்யா விகாஸ் கல்வி  நிறுவனங்களின் தலைவர் முருகன்,  செயலர் குணசேகரன்,  தாளாளர் சிங்காரவேலு, நிர்வாக அறங்காவலர்கள் ராமலிங்கம், முத்துசாமி, மக்கள் தொடர்பு அலுவலர் பழனியப்பன், முதல்வர் சீராளன், உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags : Vidya Vikas School Students Exam ,
× RELATED ராசிபுரம் பாவை கல்லூரி சார்பில் கொரோனா விழிப்புணர்வு பேரணி