×

அதிமுக வட்ட செயலாளர்கள் உட்பட 16 பேர் அதிரடி நீக்கம்

சேலம், நவ.8: சேலம் மாநகர் மாவட்ட அதிமுகவில் வட்டச்செயலாளர்கள் கணேசன்(3வது வார்டு), முத்துசாமி((24வது வார்டு), மணி(6வது வார்டு), எல்.பி.சீனிவாசன்(7வதுவார்டு), அர்ஜூனன்(44வது வார்டு), உள்பட 16 பேர் கட்சி பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும் முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமித்துள்ளனர். அதன் விவரும் வருமாறு : சேலம் மாநகர் மாவட்ட எம்ஜிஆர் மன்ற நிர்வாகிகள்: துணை தலைவர் துரை பழனிசாமி, இணை செயலாளர்கள் மனோகரன், சத்யா, பழனி, பாஸ்கர், லலிதா செந்தில்குமார், மாதேஷ், துணை செயலாளர்கள் ரத்தினம், அர்ஜூனன், மெடிக்கல் மோகன்ராஜ்,மாநகர் மாவட்ட ஜெ.பேரவை நிர்வாகிகள்: இணை செயலாளர்கள் மாரியப்பன், மாஸ்டர் முருகேசன், செங்கோட்டையன், துணை செயலாளர்கள் ராமசாமி, ரத்தினகாந்த்.

எம்ஜிஆர் இளைஞரணி நிர்வாகிகள்: மாவட்ட தலைவர் அருள்ராம், இணை செயலாளர் சீனிவாசன். சிறுபான்மையினர் நல பிரிவு நிர்வாகிகள்: இணை செயலாளர் முகமது உசேன், துணை செயலாளர்கள் அஜிஸ்ரஹ்மான், மன்சூர் யாசின்.
தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள்: தலைவர் பாலு, செயலாளர் கனகராஜ். வர்த்தக அணி நிர்வாகிகள்: தலைவர் ராமராவ், துணை தலைவர் பாபு, மாவட்ட செயலாளர் ராம்ராஜ், இணை செயலாளர்கள் சண்முகவேல், லக்கி செல்வம், துணை செயலாளர்கள் விஜயகுமார், அச்சின் சங்கர், பொருளாளர் கயர்பாபு என்கிற முகமது நூருல் ஹீதா. சூரமங்கலம் பகுதி கழக அவைத்தலைவர் முத்துசாமி, சூரமங்கலம் பகுதி 1வது வட்ட பிரதிநிதி பரமசிவம், 3வது வட்ட அவைத்தலைவர் கணேசன், 3வது வட்ட செயலாளர் சின்னாக்கவுண்டர், 24வது வட்ட செயலாளர் கிருபாகரன், 24வது வட்ட இணை செயலாளர் சாந்தி, 24வது வட்ட துணை செயலாளர் செல்வராஜ், 24வது வட்ட பிரதிநிதி மூர்த்தி, அம்மாபேட்டை பகுதி 44வது வட்ட செயலாளர் பழனிச்சாமி, அஸ்தம்பட்டி பகுதி 6வது வட்ட செயலாளர் சதீஷ் என்கிற வெங்கடேசன், 7வது வட்ட செயலாளர் ராஜ்கமல், 6வது வட்ட பிரதிநிதி குரு என்கிற குபேந்திரன், 7வது வட்ட இணை செயலாளர் உமாராணி.

Tags : persons ,AIADMK Circle Secretaries ,
× RELATED மொரீஷியசில் சிக்கிய 98 பேர் சென்னை திரும்பினர்