பூலாம்பட்டி எஸ்கேடி பள்ளியில் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி

இடைப்பாடி, நவ.8:பூலாம்பட்டி இண்டர்நேஷனல் கியோ குஷின் ரியோ கராத்தே அமைப்பின் சார்பில், சேலம் மாவட்ட அளவிலான கராத்தே போட்டி, எஸ்கேடி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது.  மாவட்ட அளவில் 28 பள்ளிகளிலிருந்து 150 மாணவ, மாணவிகள் சண்டை மற்றும் கட்டா பிரிவில் கலந்து கொண்டு பல்வேறு பரிசுகளை வென்றனர். போட்டிக்கு சிறப்பு அழைப்பாளராக எஸ்கேடி பள்ளி தலைவர் பரமசிவம், தாளாளர் கிருஷ்ணவேணி, துணை தலைவர் கோமதி, முதல்வர் கில்பர்ட், துணை முதல்வர் சாதிக்பாஷா, மேலாளர் மணி, நிர்வாக அலுவலர் இனியவன் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினர். போட்டிக்கான ஏற்பாடுகளை கராத்தே பயிற்சியாளர் சிவானந்தம் செய்திருந்தார்.

Advertising
Advertising

Related Stories: