ஆட்டையாம்பட்டியில் பைப் லைன் உடைந்து வீணாகும் காவிரி குடிநீர்

ஆட்டையாம்பட்டி, நவ.8: ஆட்டையாம்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட பல இடங்களில், காவிரி குடிநீர் பைப் லைன்கள் உடைந்து பல லட்சம் லிட்டர் தண்ணீர் சாக்கடையில் கலந்து வீணாகி வருகிறது. ராசிபுரம் ரோட்டில் பேரூராட்சி அலுவலகம் எதிரில், காவிரி குடிநீர் பைப்லைனில் உடைப்பு ஏற்பட்டு, குடிநீர் வீணாகி வருவதால், சாலையில் செல்லும் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர். வாரம் ஒருமுறை மற்றும் 10 நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீர் விநியோகிக்கப்படும் நிலையில், உடைந்த பைப் லைனை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertising
Advertising

Related Stories: