×

அதிமுகவில் சேலம், ஓமலூர் ஒன்றியங்கள் பிரிப்பு: நிர்வாகிகளும் நியமனம்

சேலம்,நவ. 8: சேலம் புறநகர் மாவட்ட அதிமுகவில் சேலம், ஓமலூர் வடக்கு, ஓமலூர் தெற்கு ஒன்றியங்கள் பிரிக்கப்பட்டு, நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். சேலம் அதிமுக புறநகர் மாவட்டத்தில் சேலம், ஓமலூர் வடக்கு, ஓமலூர் தெற்கு என செயல்பட்டு வந்த ஒன்றியங்கள், நிர்வாக வசதிக்காக சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, ஓமலூர் வடக்கு, ஓமலூர் தெற்கு, ஓமலூர் மேற்கு என பிரிக்கப்பட்டுள்ளது. மேலும் நிர்வாகிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன்விவரம் வருமாறு: சேலம் மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் சீனிவாசன், செயலாளர் ஏவி ராஜு, இணை செயலாளர் ராஜேஸ்வரி, துணை செயலாளர்கள் தமிழ்செல்வி, வெங்கடாசலம், பொருளாளர் மெய்யப்பன், மாவட்ட பிரதிநிதிகள் சிவகாமி, கருணாகரன், கண்ணன்.

ஓமலூர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் பரமசிவம், செயலாளர் அசோகன், இணை செயலாளர் ஜோதிமணி, துணை செயலாளர்கள் ராஜகுமாரி, ராமசாமி, பொருளாளர் மகாலிங்கம், மாவட்ட பிரதிநிதிகள் சங்கீதா, நல்லதம்பி, பிரகாஷ்.
ஓமலூர் வடக்கு ஒன்றிய அவைத்தலைவர் தங்கவேல், செயலாளர் கோவிந்தராஜ், இணை செயலாளர் தனம், துணை செயலாளர்கள் வத்சலா, அம்மாசி, பொருளாளர் சரவணன், மாவட்ட பிரதிநிதிகள் செல்வி, குப்புசாமி, உத்தமன்.
ஓமலூர் மேற்கு ஒன்றிய அவைத்தலைவர் முருகன், செயலாளர் ராஜேந்திரன், இணை செயலாளர் ராஜாமணி, துணை செயலாளர்கள் சாந்தி, சின்னதுரை, பொருளாளர் செல்வம், மாவட்ட பிரதிநிதிகள் இருசாயி, சேட்டு, மணி.
சேலம் மேற்கு ஒன்றியம் மல்லமூப்பம்பட்டி ஊராட்சி செயலாளர் ஜெகதீஷ், சர்க்கார் கொல்லப்பட்டி ஊராட்சி செயலாளர் நெடுமாறன், தளவாய்பட்டி ஊராட்சி செயலாளர் ஏழுமலை, தாரமங்கலம் ஒன்றியம் கருக்கல்வாடி ஊராட்சி செயலாளர் பழனிசாமி ஆகியோரை அதிமுக ஒருங்கிணைப்பாளர் பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்வருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் நியமித்துள்ளனர்.

Tags : Salem ,Executives ,Omalur Unity Separators ,
× RELATED செய்தித்தாள் நிர்வாகிகள் முதல்வருடன் சந்திப்பு