ராஜபாளையத்தில் கொசு உற்பத்தி கடைகளுக்கு அபராதம்

ராஜபாளையம், நவ.8: ராஜபாளையம் நகராட்சி பகுதியில் அதிகாரிகள் ஆய்வின்போது பழைய இரும்பு கடைகள் மற்றும் டாஸ்மாக் கடைகள் சுகாதாரமற்ற நிலையில் டெங்குகொசு உற்பத்தியாகும் வகையில் இருந்ததால் அபராதம் விதிக்கப்பட்டது. ராஜபாளையம் நகராட்சி ஆணையாளர் நடராஜன் உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா மற்றும் குடிமைப்பொருள் வட்டாட்சியர் ரங்கசாமி தலைமையில் டெங்கு விழிப்புணர்வு வார நாளை முன்னிட்டு டிபி மில்ஸ் ரோடு, மலையடிப்பட்டி, மதுரை ரோடு ஆகிய பகுதிகளில் உள்ள ஆறு பழைய இரும்பு கடைகள் மற்றும் நான்கு டாஸ்மாக் மதுபான கடைகள் ஆகியவை ஆய்வு செய்யப்பட்டது. அவற்றில் டெங்கு கொசு உற்பத்தி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அபராத தொகையாக மொத்தம் ரூ.21500 வசூல் செய்யப்பட்டது.

டாஸ்மாக் மதுபான கடைகளில் ஒரு முறை பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்படுவதோடு இனிவரும் காலங்களில் அவ்வாறு பயன்படுத்தக் கூடாது என நகர்நல அலுவலர் டாக்டர் சரோஜா அறிவுறுத்தினார். ஆய்வின்போது நகராட்சி சுகாதார ஆய்வாளர்கள் காளி, மாரிமுத்து, சுதாகரன், பழனிச்சாமி, பாலகிருஷ்ணன், வேல்சாமி மற்றும் துப்புரவு மேற்பார்வையாளர்கள் உடனிருந்தனர்.

Tags : mosquito production shops ,Rajapalayam ,
× RELATED தனியார் ரயில்களில் வசூல் குறைந்தால் 180...