×

வி.டி.மணி நகர் முப்பெரும் விழா

விருதுநகர், நவ.8: விருதுநகர் அருகே வி.டி.மணிநகர் முப்பெரும் விழா நேற்று நடைபெற்றது. விழாவில் வி.டி.மணிகண்டன் நகரில் கட்டப்பட்டுள்ள பிரமாண்ட மணிமண்டபத்தை நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் கரிக்கோல்ராஜ் தலைமையில் விருதுநகர் எம்எல்ஏ ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன் முன்னிலையில் திமுக தெற்கு மாவட்ட செயலாளர் சாத்தூர் ராமச்சந்திரன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் குளோபல் பாலிபேக்ஸ் நிறுவனர் தொழில் அதிபர் முரளிதரன், திமுக நிர்வாகிகள் சுப்பாராஜ் உள்பட பலர் பங்கேற்றனர்.

இதை தொடர்ந்து நடைபெற்ற நிகழச்சியில் மணிகண்டன் மெட்ரிக்குலேஷன் பள்ளி நூலகம், கட்டிட வளாகத்தை சமக பொதுச் செயலாளர் சரத்குமார் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் சமக நிர்வாகிகள், நாடார் மகாஜன சங்க நிர்வாகிகள், வணிகர் சங்கம் பேரவை நிர்வாகிகள் பங்கேற்றனர்.முன்னதாக விடி மணிகண்டன் மெட்ரிக்குலேசன் பள்ளி ஆண்டு விழாவில் மதுரை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சுவாமிநாதன், மாவட்ட கல்வி அலுவலர் இந்திராணி பங்கேற்றனர். ஏற்பாடுகளை தங்கராஜ், அவரின் துணைவியார் வெங்கடேஸ்வரி செய்திருந்தனர்.

Tags : VT Mani Nagar Festival ,
× RELATED கொரோனா வைரஸ் குறித்து தண்டோரா அடித்து விழிப்புணர்வு