×

அதிமுகவில் அமமுக நிர்வாகிகள் : அமைச்சர் முன்னிலையில் இணைந்தனர்

சிவகாசி, நவ.8: சுந்தரபாண்டியபுரம், வத்ராப் பகுதியை சேர்ந்த ஏராளமான அமமுக.வினர் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். விருதுநகர் மாவட்டம் சுந்தரபாண்டியபுரம் பேரூர் கழக செயலாளர் சிட்டிபாபு மற்றும் வத்ராப் அமமுக ஒன்றிய இணை செயலாளர் கூமாபட்டி கனகராஜ் மற்றும் ஏராளமான அமமுக.வினர் அக்கட்சியில் இருந்து விலகி அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர்.

வரும் உள்ளாட்சி தேர்தலில் அதிமுகவின் வெற்றிக்கு பாடுபடுவோம் என்று அமைச்சரிடம் அவர்கள் தெரிவித்தனர். நிகழ்ச்சியில் சாத்தூர் எம்எல்ஏ எம்.எஸ்.ஆர்.ராஜவர்மன், மாவட்ட எம்ஜிஆர் மன்ற இணைச்செயலாளர் சீனிவாசன் உட்பட கட்சி நிர்வாகிகள் உடனிருந்தனர்.

Tags : executives ,AMC ,AIADMK ,
× RELATED வங்கி நிர்வாகிகளுடன் முதல்வர், துணை முதல்வர் இன்று ஆலோசனை