×

ராஜபாளையம் விவசாயிகளுக்கு மரக்கன்று வழங்கல்

ராஜபாளையம், நவ.8: ராஜபாளையம் தாலுகா அளவில் வேளாண்துறை சார்பில் மானாவாரி நிலங்களில் விவசாயிகள் நடுவதற்கு மரக்கன்றுகள் வழங்கப்பட்டன. ராஜபாளையம் வட்டாரத்தில் நீடித்த நிலையான மானாவாரி மேம்பாட்டு திட்டத்தின் கீழ் சோழபுரம், தெற்கு வெங்கநல்லூர், அயன்கொல்லங்கொண்டான், ஜமீன் கொல்லங்கொண்டான், புதூர், இளந்திரைகொண்டான், சமுசிகாபுரம், ராமலிங்காபுரம் போன்ற கிராமங்களில் விவசாயிகளுக்கு ஒரு ஹெக்டேருக்கு 50 பனை விதைகள், 8 மர வகை கன்றுகள், 2 பழக்கன்றுகள் வீதம் மொத்தம் 5,0000 கன்றுகள், விதைகள் வழங்கப்பட்டது. வேளாண்மை இணை இயக்குனர் அருணாச்சலம் கன்றுகளை நட்டு தொடங்கி வைத்தார்.

Tags : Rajapalayam ,
× RELATED ஊரடங்கால் வியாபாரிகள் வருகை ‘கட்’ பல...