×

சிவகாசி போலி பாரில் பாட்டில், பணம் பறிமுதல்

சிவகாசி, நவ.8: சிவகாசியில் அனுமதியின்றி இயங்கிய பாரிலிருந்து மது பாட்டில்கள், பணம் பறிமுதல் செய்யப்பட்டது. சிவகாசி அருகே ரிசர்வ்லைன் பஸ் ஸ்டாப் பகுதியில் மாரியப்பன் என்பவருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இந்த கட்டிடத்தில் ஏற்கனவே டாஸ்மாக் பார் இயங்கி வந்தது. இதற்கு மக்கள் எதிர்ப்பு தெரிவிக்கவே கடந்த 2 ஆண்டுக்கு முன் பார் அகற்றப்பட்டது.

இந்நிலையில், அதே கட்டிடத்தில் அனுமதியின்றி பார் இயங்குவதாக வருவாய்த்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. சப் கலெக்டர் தினேஷ்குமார், தாசில்தார் ரெங்கநாதன் தலைமையில் வருவாய்த்துறையினர் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் அனுமதியின்றி பார் இயங்கியது தெரியவந்தது. பாரில் இருந்த 50 மது பாட்டில், ரூ.8400 ஆயிரம் ரொக்கப்பணம், சிலிண்டர், அடுப்பு, பாத்திரங்கள் போன்றவைகளை பறிமுதல் செய்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் சிவகாசி டவுன் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Tags : Sivakasi ,
× RELATED சிவகாசி அருகே 3 குழந்தைகளுக்கு விஷம் கொடுத்து தந்தை தற்கொலை முயற்சி