×

3 ஆயிரம் ஆண்டு பழமையானமுனியறைகளைச் சுத்தப்படுத்தும் பணி மூணாறு அருகே துவங்கியது

மூணாறு, நவ.8: மூணாறு அருகே 3 ஆயிரம் ஆண்டு பழமையான முனியறைகளை சுத்தப்படுத்தும் பணி நேற்று துவங்கியுள்ளது. மூணாறு அருகே அஞ்சுநாடு மறையூர் பகுதியில் வரலாற்று சிறப்புமிக்க முனியறைகள் உள்ளன. பண்டைய மனிதர்கள் காட்டு மிருகங்களுக்கு பயந்து தங்களின் வாழ்விடகளாய், பாதுகாப்பாக அமைத்துகொண்ட இடங்கள் தான் முனியறைகளாகும். மறையூர் பகுதிகளில் உள்ள முனியறைகள் 3 ஆயிரம் ஆண்டு பழமையானதாகும். இந்த முனியறைகளுக்கு `பாண்டியன் பேரு’ என்ற பெயரும் இருந்துள்ளது. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க முனியறைகள் சேதம் அடைந்தும் சமூக விரோத செயல்களும் அரங்கேறி வந்தது. இவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் தேவிகுளம் துணை கலெக்டர் எஸ்.பிரேம்கிருஷ்ணன் தலைமையில் மூணாறு ஜனமந்தேரி போலீசார், பள்ளி மாணவ, மாணவிகள் மற்றும் கோட்டயம் தேவார திருஇருதய கல்லூரி என்என்எஸ் மாணவர்கள், மகளிர் சுய உதவிக்குழுவினர், வியாபாரிகள், விவசாய சங்கத்தினர் ஓன்று சேர்ந்து முருகன் மலையில் அமைந்துள்ள முனியறைகளை தூய்மைப்படுத்தும் பணியில் நேற்று ஈடுபட்டனர்.

இப்பணியை துவங்கி வாய்த்த தேவிகுளம் துணை கலெக்டர் கூறுகையில், அஞ்சுநாட்டில் பல இடங்களில் காணப்படும் வரலாற்று சிறப்புமிக்க முனியறைகளை பாதுகாப்பதன் மூலம் சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை அதிகரிக்கும். வரும் தலைமுறையினருக்கு முனியறை குறித்து அறிவதற்கு ஒரு வாய்ப்பும் கிடைக்கும் என்று கூறினார்.இந்த நிகழ்ச்சியில் மறையூர் கிராம பஞ்சாயத்து தலைவர் என்.ஆரோக்கியதாஸ், தேவிகுளம் ஜனமந்தேரி இன்ஸ்பெக்டர் சி.கே சுனில்ராஜ் மற்றும் பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஜோமோன், பாலகிருஷ்ணன், தொல்லியல் துறை அதிகாரிகள் ஹரிகுமார் கலந்து கொண்டனர்.

Tags : Munnar ,
× RELATED மூணாறு அருகே துதிக்கையில் காயத்துடன் சுற்றித் திரியும் குட்டி யானை