×

மாவட்ட அளவிலான பேச்சுப்போட்டியில் அரசு பள்ளி முதலிடம்

தேவதானப்பட்டி, நவ. 8: தேவதானப்பட்டி அருகே உள்ள சில்வார்பட்டி அரசு பள்ளி மாணவர்கள் மாவட்ட அளவில் நடைபெற்ற பேச்சுப் போட்டியில் முதலிடம் பிடித்தனர். தேனியில் தனியார் பள்ளியில் மாவட்ட அளவில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி நடைபெற்றது.
இதில் அரசு பள்ளி மற்றும் தனியார் பள்ளி உள்பட 32 பள்ளிகளின் மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில் சில்வார்பட்டி அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவி கபிலா பேச்சு போட்டியில் முதல் இடம் பிடித்தார். 10ம் வகுப்பு மாணவி சுவாதி கட்டுரை போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து தங்களின் தனித்திறமை மூலம் பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு கலெக்டர் பல்லவி பல்தேவ் பரிசு வழங்கினார். மாவட்ட அளவில் நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்று கலெக்டரிடம் பரிசு வாங்கிய மாணவிகளை தலைமை ஆசிரியர் மோகன் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.

Tags : Government school ,talk show ,
× RELATED கொடைக்கானல் அரசு பள்ளி மாணவர் பல் மருத்துவத்தில் சேர்ந்தார்