×

இரண்டு மாதத்திற்கு பின் உயர்ந்தது காய்கறி விலை

தேனி, நவ. 8: தேனி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளாகவே மழை குறைவால் காய்கறிகளின் விளைச்சல் குறைந்து விலைகள் உயர்ந்து காணப்பட்டது. இந்நிலையில் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் மிக குறைவாக பெய்த தென்மேற்கு பருவமழையில் காய்கறி விளைச்சல் பரப்பு அதிகரிக்கப்பட்டது. வடகிழக்கு பருவமழை நல்ல முறையில் பெய்தாலும், காய்கறி வரத்து இருந்ததால் விலைகள் கிடுகிடுவென சரிந்தன.
இரண்டு மாதங்கள் வரை காய்கறிகளின் விலைகள் வியக்கத்தக்க அளவிற்கு குறைந்தன. இதனால் விவசாயிகள் பாதிக்கப்பட்டனர்.
இந்நிலையில் கடந்த ஒரு வாரம் தேனி மாவட்டத்தில் பெய்த மழையால், காய்கறிகளின் விளைச்சலும், விளைந்த காய்கறிகளை பறித்து சந்தைக்கு கொண்டு வரும் பணிகளும் பாதிக்கப்பட்டன.

இதனால் அனைத்து வகை காய்கறிகளின் விலைகளும் பாகுபாடின்றி கிலோவிற்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக சின்னவெங்காயம் விலை மீண்டும் 55 ரூபாயாக உயர்ந்துள்ளது. பெல்லாரி வெங்காயத்தின் விலை 65 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது. தேனி உழவர்சந்தையில் நேற்று காய்கறிகளின் விலை நிலவரம் (கிலோவிற்கு ரூபாயில்): கத்தரிக்காய்- 30, தக்காளி- 20, வெண்டைக்காய்- 30, கொத்தவரங்காய்- 20, சுரைக்காய்- 15, பாகற்காய்- 35, பீர்க்கங்காய்- 30, முருங்கைக்காய்- 60, பச்சைமிளகாய்- 30, உருளைக்கிழங்கு,
கருணைக்கிழங்கு, சேம்பங்கிழங்கு தலா 30 ரூபாய், கொத்தமல்லி- 70, புதினா- 55, பட்டர்பீன்ஸ்- 130, சோயாபீன்ஸ்- 80, முருங்கை பீன்ஸ்- 45, பீட்ரூட்- 25, நூல்கோல்- 30. தேனி சில்லரை மார்க்கெட்டில் இதன் விலைகள் கிலோவிற்கு மேலும் 5 ரூபாய் சராசரியாக கூடுதலாக உயர்ந்து விற்கப்படுகிறது.

Tags :
× RELATED திருச்சியில் வியாபாரிகள் கடையடைப்பு...