×

தாழ்வாக செல்லும் மின்கம்பியால் அபாயம்

அரூர், நவ.8: அரூர் பேரூராட்சி 7வது வார்டு கோவிந்தசாமி நகரில் தாழ்வாக செல்லும் மின்கம்பியால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. அரூர் பேரூராட்சி 7வது வார்டுக்குட்பட்ட கோவிந்தசாமி நகரில், சுமார் 300 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் மின்விநியோகத்திற்காக மின்கம்பங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கம்பத்தில் இருந்து செல்லும் மின்கம்பிகள், குடியிருப்பு பகுதியில் மிகவும் தாழ்வாக செல்வதால், விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து அப்பகுதி மக்கள், மின் வாரிய அதிகாரிகளிடம் புகார் கூறியும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. மழைக்காலம் என்பதால், தாழ்வான மின்கம்பிகளால் அசம்பாவிதம் நிகழும் முன்பு, மின்கம்பியை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags :
× RELATED பராமரிப்பு இல்லாததால் அருப்புக்கோட்டையில் பாலம் இடியும் அபாயம்