பேண்டு வாத்திய இசை போட்டி

தர்மபுரி, நவ.8: தர்மபுரி மாவட்ட அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் சார்பில், பள்ளி மாணவர்களிடையே மாவட்ட அளவில் பேண்டு வாத்திய இசை போட்டி நடந்தது. தர்மபுரி மாவட்ட ஒருங்கிணைந்த பள்ளி கல்வி சார்பில், மத்திய அரசின் மனித வளமேம்பாட்டு துறை மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்க திட்டம் சார்பில், பள்ளி மாணவர்களிடையே மாவட்ட அளவிலான பேண்டு வாத்திய போட்டிகள், தர்மபுரி அதியமான் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. போட்டிகளை உதவி மாவட்ட திட்ட அலுவலர் தங்கவேலு தொடங்கி வைத்து பார்வையிட்டார். போட்டிகளில் தனியார் மற்றும் அரசு பள்ளிகளை சேர்ந்த மாணவ குழுவினர் பங்கேற்றனர். இதில் முதலிடத்தை தர்மபுரி ஸ்ரீவிஜய் வித்யாலயா ஆண்கள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியும், 2ம் இடத்தை தர்மபுரி அதியமான் ஆண்கள் அரசு மேல்நிலைப்பள்ளியும் பெற்றன. நிகழ்ச்சியில் தர்மபுரி கல்வி மாவட்ட ஒருங்கிணைப்பாளர் ராஜகோபால் உள்ளிட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

Tags : Band Music Competition ,
× RELATED கடத்தூர் அருகே பழுதான தொட்டியை அகற்ற வலியுறுத்தல்