ரிக் உரிமையாளர்கள் ஆலோசனை கூட்டம்

தர்மபுரி, நவ.8: தர்மபுரி மாவட்ட ரிக் உரிமையாளர்கள் மற்றும் புக்கிங் ஏஜென்டுகள் சங்கம் சார்பில், ஆலோசனை கூட்டம் நேற்று நடந்தது.  தர்மபுரியில் நடந்த கூட்டத்திற்கு, மாவட்ட தலைவர் சிவா தலைமை வகித்தார். கூட்டத்தில், திருச்சியில் ஆழ்துளை கிணற்றில் விழுந்து இறந்த சிறுவன் சுஜித் மற்றும் உடல் நலக்குறைவால் இறந்த தர்மபுரி மாவட்ட ரிக் உரிமையாளர்கள் சங்க செயலாளர் பழனிவேல் ஆகியோருக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. கூட்டத்தில் தலைவர் சிவா பேசுகையில், ‘தர்மபுரி கலெக்டர் மலர்விழி உத்தரவின் பேரில், ஆழ்துளை கிணறுகள் அமைக்கும் ரிக் உரிமையாளர்கள் அனைவரும் உரிமம் பெற கட்டணம் செலுத்தி, ரசீது மற்றும் அனுமதியை பெற்றுக் கொள்ள வேண்டும். ஆழ்துளை கிணறு ஏஜெண்டுகளுக்கு ஏற்படும் பல்வேறு நடைமுறை சிக்கல்களை தவிர்க்க, அனைவருக்கும் ஆதார் எண், புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும்,’ என்றார். இதில், திருப்பதி, சேட்டு, குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Rick Owners Advice Meeting ,
× RELATED கடத்தூர் அருகே பழுதான தொட்டியை அகற்ற வலியுறுத்தல்