×

தனியார் பள்ளி உரிமையாளர்கள் முதல்வர்கள் ஆலோசனை கூட்டம்

பாலக்கோடு, நவ.8: பாலக்கோட்டில், தனியார் பள்ளிகளின் உரிமையாளர்கள் மற்றும் வாகன மேற்பார்வையாளர்கள், பள்ளி முதல்வர்கள் ஆகியோருக்கான ஆலோசனை கூட்டம், பாலக்கோடு மோட்டார் வாகன அலுவலகத்தில் நடந்தது.  இந்த கூட்டத்தில் மோட்டார் வாகன ஆய்வாளர் முனுசாமி தலைமை வகித்து பேசுகையில், ‘3 வயது குழந்தைகள் முதல் 17 வயது குழந்தைகள் வரை பயணிப்பதால், பள்ளி வாகனங்களை சரியான முறையில் பராமரிக்க வேண்டும். மாநில அரசின் உத்தரவுப்படி, பாலக்கோடு வட்டத்தில் உள்ள 39 பள்ளிகள் பயன்படுத்தும் 320 வாகனங்களிலும், சிசிடிவி மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை விரைவில் பொருத்த வேண்டும். பள்ளிக்கு வரும் சிறுவர்கள் லைசென்ஸ் இல்லாமல், இரண்டு சக்கர வாகனங்களை பயன்படுத்தவோ, பள்ளிக்கு எடுத்து வரவோ கூடாது,’ என்றார். இதில் கலந்து கொண்ட பள்ளி உரிமையாளர்கள், பாதுகாப்பு கருவிகளை பொருத்த 2மாத கால அவகாசம் ேவண்டும் என கோரிக்கை வைத்தனர். இந்த கூட்டத்தில், பாலக்கோடு வட்டத்தில் உள்ள 32 பள்ளியை சேர்ந்த பள்ளி முதல்வர்கள், வாகனம் மேற்பார்வையாளர்கள் உள்பட 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.

Tags : Private School Owners Counseling Meeting ,
× RELATED தர்மபுரியில் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்ட ஜவுளி பூங்கா திட்டம்