கூத்தாண்டவர் கோயில் விழா

பாப்பிரெட்டிப்பட்டி, நவ.8: பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாமியாபுரம் கூட்ரோட்டில் உள்ள கூத்தாண்டவர் கோயில் விழா நடந்தது. பாப்பிரெட்டிப்பட்டி அருகே சாமியாபுரம் கூட்ரோடு பகுதியில், கூத்தாண்டவர் கோயிலில் சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளாக திருவிழா நடந்து வருகிறது. ஒரு வருடம் விட்டு ஒரு வருடம் நடக்கும் இந்த விழாவில், பாப்பிரெட்டிப்பட்டி, அலமேலுபுரம், ஆவரங்காட்டூர், பாதைபுதூர்பேட்டை, பட்டுக்கோட்டை சாமியாபுரம், மஞ்சவாடி, கல்லாப்பெட்டி, நடுப்பட்டி உள்ளிட்ட 10 கிராம மக்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டுக்கான விழா கடந்த மாதம் 23ம் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. நேற்று அரவானுக்கு தலை எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் சாமி மீதுள்ள பூக்களை எடுத்து, பொதுமக்கள் மீது வீசினர். இதை பக்தர்கள் ஆர்வமுடன் பிடித்தனர். இந்த பூக்களை தங்களது விவசாய தோட்டங்களில் வீசினால், விளைச்சல் நன்றாக இருக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. மேலும் ரத்த சோறு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்த சோற்றை குழந்தையில்லாதவர்கள் வாங்கி சாப்பிட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது. இந்த நிகழ்ச்சியில் சுற்றுவட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

Tags : Koothantavar Temple Festival ,
× RELATED கடத்தூர் அருகே பழுதான தொட்டியை அகற்ற வலியுறுத்தல்