×

பள்ளி வாகனங்களுக்கு கேமரா, ஜிபிஎஸ் கருவி பொருத்த உத்தரவு

தர்மபுரி, நவ.8:  தர்மபுரி மாவட்ட பள்ளி வாகனங்களுக்கு சிசிடிவி கேமரா, ஜிபிஎஸ் கருவி பொருத்த உத்தரவிடப்பட்டுள்ளது. தர்மபுரி மாவட்ட வட்டார போக்குவரத்து அலுவலகத்தில், நேற்று பள்ளி வாகன மேலாளர்களுக்கான கலந்தாய்வு கூட்டம் நடந்தது. இதில் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமை வகித்து பேசுகையில், ‘உயர் நீதிமன்ற உத்தரவின் பேரில், தமிழக போக்குவரத்துறை கமிஷனரின் அறிவுறுத்தலின் பேரில், தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களிலும் மாணவ, மாணவிகளின் பாதுகாப்பு கருதி சிசிடிவி கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவி உடனடியாக பொருத்த வேண்டும். தகுதி சான்று பெற வரும் வாகனங்களில், சிசிடிவி கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவி பொருத்தியிருந்தால் தான், தகுதி சான்று அளிக்கப்படும். மேலும், தற்போது இயக்கத்தில் உள்ள அனைத்து பள்ளி வாகனங்களிலும், சிசிடிவி கேமரா மற்றும் ஜிபிஎஸ் கருவிகளை உடனடியாக பொருத்தி, வட்டார போக்குவரத்து அதிகாரிகளிடம் காண்பித்து சான்று பெற வேண்டும்,’ என்றார். இந்த கலந்தாய்வில், போக்குவரத்து ஆய்வாளர்கள் மணிமாறன், ராஜாமணி மற்றும் அனைத்து பள்ளி வாகன பராமரிப்பு மேலாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED மத்திய பிரதேசத்தில் இருந்து...