×

ரேஷன்கடை நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம்

தர்மபுரி, நவ.8: தர்மபுரி மாவட்டத்தில் தாலுகா அளவில் ரேஷன் கடை நுகர்வோர் குறைதீர்க்கும் முகாம்கள் நாளை (9ம் தேதி) நடக்கிறது. இது குறித்து கலெக்டர் மலர்விழி விடுத்துள்ள அறிக்கை: தர்மபுரி மாவட்ட கூட்டுறவு துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் சார்பில், பொது வினியோக திட்ட ரேஷன் கடைகளில் நுகர்வோருக்கு பொருட்கள் முறையாக வழங்கப்படுகிறதா என்பதை உறுதிப்படுத்தவும், பிற குறைகள் தொடர்பாகவும் தாலுகா அளவில் குறைதீர்க்கும் முகாம்கள் மாதந்தோறும் நடத்தப்படுகிறது. இம்மாதத்திற்கான குறைதீர்க்கும் முகாம் நாளை (9ம் தேதி) காலை 10 மணிக்கு, அனைத்து தாலுகாக்களிலும் நடக்கிறது. இதன்படி, தர்மபுரி தாலுகாவில் கீழ் மாட்டுக்காரனூரிலும், பென்னாகரம் தாலுகாவில் மாதேஅள்ளியிலும், பாலக்கோடு தாலுகாவில் பஞ்சப்பள்ளியிலும், அரூர் தாலுகாவில் செக்காரப்பட்டியிலும், பாப்பிரெட்டிப்பட்டி தாலுகாவில் பள்ளிப்பட்டியிலும், நல்லம்பள்ளி தாலுகாவில் குரும்பட்டியான் கொட்டாயிலும், காரிமங்கலம் தாலுகாவில் காடையாம்பட்டியிலும் உள்ள ரேஷன் கடைகளில் குறைதீர்க்கும் முகாம்கள் நடக்க உள்ளது.  இந்த முகாம்களில், பொதுமக்கள் கலந்து கொண்டு, பொது விநியோக திட்டம் தொடர்பான தங்களது குறைகளை, மனுக்களாக தெரிவித்து நிவர்த்தி செய்து கொள்ளலாம். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags : Rashankadai Consumer Grievance Redressal Camp ,
× RELATED தாலுகா அளவில் ரேஷன்கடை நுகர்வோர் குறை தீர்க்கும் முகாம்