×

தண்ணீர் வசதியில்லாத அங்கன்வாடி மையம்

பென்னாகரம், நவ.8: பென்னாகரம் அருகே போடூர் காலனியில், அங்கன்வாடி மையத்தில் தண்ணீர் வசதி இல்லாததால் குழந்தைகள் கடும் அவதிப்பட்டு வருகின்றனர்.  பென்னாகரம் அருகே போடூர் காலனி  18வது வார்டில், 200க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில், பென்னாகரம் பேரூராட்சி நிர்வாகம் சார்பில், அங்கன்வாடி மையத்திற்கு முன் ஆழ்துளை கிணறு அமைத்து, சின்டெக்ஸ் ேடங்க் அமைக்கப்பட்டது. அங்கன்வாடி மையத்திற்கு தேவையான தண்ணீரையும், இந்த சின்ெடக்ஸ் டேங்கில் இருந்து எடுத்து பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில், கடந்த ஓராண்டாக சின்டெக்ஸ் ேடங்கிற்கான மின் மோட்டார் பழுதடைந்ததால், தண்ணீர் விநியோகம் இல்லாமல் உள்ளது.  இதனால் அங்கன்வாடிக்கு தேவையான தண்ணீரை எடுக்க, 1கி.மீ தூரம் நடந்து சென்று எடுத்து வர வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் அப்பகுதியை சேர்ந்த மக்களும் தண்ணீர் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். இது குறித்து பேரூராட்சி நிர்வாகத்திடம் புகார் கூறியும், நடவடிக்கை எடுக்காமல் மெத்தனமாக உள்ளதாக புகார் எழுந்துள்ளது. எனவே, ஆழ்துளை கிணற்றை உடனடியாக சீரமைத்து, மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர ேவண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : center ,
× RELATED விசைப்படகுகளுக்கு அனுமதி மறுப்பு