காரைக்குடி லீடர்ஸ் பள்ளியில் நன்னெறியை வளர்க்க நேர்மைஅங்காடி துவக்கம்

காரைக்குடி, நவ.8 : காரைக்குடி லீடர்ஸ் பள்ளியில் மாணவர்களிடையே நன்னெறியை வளர்க்க நேர்மை அங்காடி துவங்கப்பட்டுள்ளது. காரைக்குடி லீடர்ஸ் பள்ளியில் நன்னெறி கல்வித்திட்டத்தின் கீழ் நேர்மை அங்காடி துவங்கப்பட்டுள்ளது. இந்த நேர்மை அங்காடி என்பது ஆளில்லாத கடை, மாணவர்களே சென்று அவர்களுக்கு தேவையான பொருட்களை எடுத்துக் கொண்டு அதிற்குரிய தொகையை வைத்துவிடுவார்கள். இதன் மூலம் மாணவர்களிடம் நேர்மை எண்ணம் வளர்வதோடு அன்பு, இரக்கம், விட்டுக்கொடுத்தல், சகிப்புத்தன்மை, புரிந்துணர்வு போன்றவை வளரும்.

இதுகுறித்து பள்ளி இயக்குநர் ஞானகுரு கூறுகையில், ஒவ்வொரு மாணவர்களுக்கும் உயரிய பண்புகளை வளர்க்கக்கூடியது  நன்னெறி கல்வித்திட்டம். மாணவர்களின் தனித்துவத்தை வெளிக்கொண்டு வர நன்னெறி கல்வித்திட்டம் உதவி செய்கிறது. மாணவர்களிடம் நேர்மை எண்ணத்தை வளர்க்கவே இந்த அங்காடி துவங்கப்பட்டது. தவிர மாடித்தோட்டம் அமைத்தல், இயற்கை விவசாயம், சிறுசேமிப்பு போன்றவைகளும் போதிக்கப்படுகின்றன. மாணவர்களின் சிறுசேமிப்பு பணத்தை வைத்து புத்தங்கள் வாங்க கூறி வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிக்கிறோம். இந்த கல்வித்திட்டத்தை அனைத்து பள்ளிகளிலும் கடைபிடிக்க வேண்டும் என்பதே எங்கள் கல்விகுழுமத்தின் நோக்கம்’’ என்றார்.

Tags : Karaikudi Leaders School ,
× RELATED நேர்மையற்ற முறையில் நியமனம் பெறும்...