×

மருத்துவ நிறுவனங்கள் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அங்கீகாரம் பெற விண்ணப்பிக்கலாம்

சிவகங்கை, நவ. 8:  சிவகங்கை மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் அலுவலகம் சார்பில் தெரிவித்துள்ளதாவது: சுற்றுச்சூழல் வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தால் மருத்துவ கழிவுகள் மேலாண்மை விதி 28.03.2016ல் அறிவிக்கப்பட்டது. அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், புறநோயாளிகளின் பிரிவுகள் கால்நடை மருத்துவமனைகள், விலங்கினங்களின் சோதனைக்கூடங்கள், நோயியல் ஆய்வகங்கள், ரத்த வங்கிகள், ஆயுர்வேதம், யோகா, யுனானி, சித்தா, ஹோமியோபதி மருத்துவமனைகள், ஆராய்ச்சி மற்றும் மருத்துவ கல்வி நிறுவனங்கள், சுகாதார முகாம்கள், மருத்துவ மற்றும் அறுவை சிகிச்சை முகாம்கள், தடுப்பூசி முகாம்கள், ரத்ததான முகாம்கள், பள்ளிகளின் முதலுதவி அறைகள், தடயவியல் ஆய்வகங்கள் மற்றும் ஆராய்ச்சி ஆய்வகங்கள் ஆகியவற்றிற்கு இவ்விதி பொருந்தும்.

மருத்துவ கழிவுகளை கையாளும் மேற்குறிப்பிட்ட அனைத்து மருத்துவ நிறுவனங்களும் மாசு கட்டுப்பாடு வாரியத்திற்கு விண்ணப்பம் செய்து, அங்கீகாரம் பெற வேண்டும். அத்தகைய அங்கீகாரத்தின் காலாவதியின் தேதியானது மாசு கட்டுப்பாடு வாரியத்தினால் வழங்கப்படும் இசைவாணையுடன் ஒத்திசைவு செய்யப்பட்டு வழங்கப்படும். தமிழ்நாட்டில் உள்ள மேற்கூறிய அனைத்து நிறுவனங்களும் தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியத்தின் நீர் மற்றும் காற்று மாசு தடுப்பு விதிகளின் கீழ் இசைவாணையையும் மருத்துவ கழிவு மேலாண்மை விதிகளின் கீழ் அங்கீகாரத்தையும் உடனடியாக விண்ணப்பித்து ஒப்புதல் பெற வேண்டும். படுக்கை வசதி இல்லாத மருத்துவ நிறுவனங்கள் தாமதமின்றி மருத்துவ கழிவு மேலாண்மை விதிகள் 2016ன் கீழ் காலாவதியில்லாத அங்கீகாரத்தை பெற வேண்டும். இவ்வாறு செய்யாதவர்களுக்கு சுற்றுச்சூழல் இழப்பீட்டு தொகை விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.  எனவே சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக விண்ணப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags : organizations ,
× RELATED தொழிலாளர்களுக்கு 12 மணி நேரம் வேலையா?:...