×

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க அலைபேசி எண்

ராமநாதபுரம், நவ. 8: ராமநாதபுரத்திற்கு புதிதாக நேற்று பொறுப்பேற்ற மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்ற சம்பவங்களை தடுக்க பிரத்தியேக செல்போன் எண் அறிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஐபிஎஸ் அதிகாரிகளை இடமாறுதல் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்திருந்தது. அதன் அடிப்படையில் நெல்லை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்த வருண்குமார் ஐபிஎஸ், ராமநாதபுரம்  மாவட்டத்திற்கும், ராமநாதபுரம் மாவட்டத்தில் காவல் கண்காணிப்பாளராக பணிபுரிந்து வந்த ஓம்பிரகாஷ் மீனா நெல்லைக்கும் இடமாறுதல் செய்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. அந்த அடிப்படையில் நேற்று ராமநாதபுரத்திற்கு காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந்த வருண்குமார் ஐபிஎஸ் நேற்று, ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக்கொண்டார். இதனையடுத்து பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்ட ஓம்பிரகாஷ் மீனா அவருக்கு வாழ்த்து தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த ராமநாதபுரம் மாவட்ட எஸ்பி வருண்குமார், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அதிரடியாக தெரிவித்தார்.  மேலும் பொதுமக்கள் தங்களின் புகார்களை தெரிவிக்க பிரத்தியேகமாக 94899 19722 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். இந்த எண்ணில் எந்நேரமும் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தங்களுக்கு எதிரான பிரச்சனைகளையும், குற்றச் சம்பவங்களையும் உடனே தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என கூறினார்.

Tags : crimes ,
× RELATED குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள்...