×

ஓமன் நாட்டில் பலியான மீனவர்கள் குடும்பங்களுக்கு கருணாஸ் நேரில் ஆறுதல்

தொண்டி, நவ. 8: தொண்டி அருகே உள்ள நம்புதாளையை சேர்ந்த மீனவர்கள் நான்கு பேர் கடந்த மாதம் ஓமன் நாட்டில் கடலில் புயலில் சிக்கி பலியானார்கள் இவர்களது கும்பத்தினரை கருணாஸ் எம்எல்ஏ நேற்று நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். தொண்டி அருகே உள்ள நம்புதாளையை சேர்ந்த மீனவர்கள் சிலர் ஓமன் நாட்டில் மீன் பிடி தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் கடந்த மாதம் மீன் பிடித்துக்கொண்டிருக்கும் போது கடலில் புயல் வீசியதால் நம்புதாளையை சேர்ந்த கார்மேகம், காசிலிங்கம், ராமநாதன் மற்றொரு காசிலிங்கம் பலியானார்கள். இவர்களில் கார்மேகம் மற்றும் காசிலிங்கம் இருவரின் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. மற்ற இருவரின் உடல் கிடைக்கவில்லை.

இந்நிலையில் நேற்று இந்த நான்கு மீனவர்களின் குடும்பத்தினரையும் திருவாடானை தொகுதி எம்எல்ஏ கருணாஸ் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். நம்புதாளை அரசு துவக்கப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் மற்றும் கட்டிட வசதி கேட்டு ஆசிரியர்கள் சார்பில் மனு கொடுக்கப்பட்டது. பின்னர் நிருபர்களிடம் கருணாஸ் கூறியதாவது, இந்த தொகுதியின் எம்எல்ஏ என்ற முறையில் இச்சம்பவம் குறித்து என்னிடம் எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. எனக்கு தெரிந்த உடன் நேரில் சந்தித்து ஆறுதல் சொல்ல வந்தேன். தமிக முதல்வரை சந்தித்து இந்த மீனவர்களின் குடும்ப நிலை பற்றி எடுத்து கூறி உதவி செய்வேன் என்றார்.

Tags : Karunas ,families ,fishermen ,Oman ,
× RELATED எம்.எல்.ஏ கருணாஸ் கொலை மிரட்டல் விடுத்ததாக புகார்