×

ஆர்.எஸ்.மங்கலம் தாலுகாவில் மீண்டும் பாலித்தீன் பயன்பாடு அதிகரிப்பு

ஆர்.எஸ்.மங்கலம், நவ.8: ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மீண்டும் பாலித்தீன் பயன்பாடு அதிகரித்துள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு மற்றும் மண் வளம் பதிப்பு ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் பாலித்தீன், பிளாஸ்டிக் பயன்படுத்துவதற்கு முற்றிலும் தடைவிதிக்கப்பட்டு  இந்த ஆண்டு ஜனவரி 1ம் தேதி முதல் அமல்படுத்தப்பட்டு நடைமுறையில் உள்ளது. இதில் ராமநாதபுரம் மாவட்டத்தில் முன்னேற்பாடாகவே மாவட்ட ஆட்சியரின் நடவடிக்கையின் பேரில் அதற்கு சில மாதங்களுக்கு முன்பாகவே பாலித்தீன் பயன்படுத்துவதற்கு தடைவிதிக்கப்பட்டு நடைமுறையில் இருந்துவந்தது. இந்நிலையில் ஆர்.எஸ்.மங்கலம், உப்பூர், திருப்பாலைக்குடி, ஆனந்தூர், சனவேலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பெட்டிக்கடை முதல் டீக்கடை, பேக்கரி, ஹோட்டல் மற்றும் அனைத்து கடைகளிலும் பாலித்தீன் பயன்பாடு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

இதுமட்டுமின்றி பெரும்பாலான டீக்கடை, ேஹாட்டல்களில் டீ, சாம்பார், சட்னியை பாலித்தீன் பைகளில் சூடாக கட்டிக் கொடுக்கின்றனர். மேலும் ஹோட்டல்களில்  வாழை இலைக்கு பதிலாக  பாலித்தீன் கவர்  மற்றும்  கம்ப்யூட்டர் இலை என்று சொல்லக்கூடிய  ரசாயனம் பூசப்பட்ட இலைகள் பயன்படுத்துகின்றனர். இதனால் பொதுமக்களுக்கு புற்றுநோய் மற்றும் பல உடல் உபாதைகள் ஏற்படுகிறது.   இதனை தடுக்கவேண்டிய சுகாதாரத்துறையும், உணவு பாதுகாப்பு துறையும் வேடிக்கை பார்க்காமல் உடனடியாக துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமென சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

Tags : taluk ,RS Mangalam ,
× RELATED போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இன்றி...